ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்...! - அண்ணாமலையார் கோயில்

புரட்டாசி மாத மஹா பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்...!

author img

By

Published : Oct 8, 2022, 10:23 AM IST

திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தால் முக்தி தரும் தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு புரட்டாசி மாத மஹா பிரதோஷ விழா நேற்று மாலை நடைபெற்றது. பெளர்ணமி மற்றும் அமாவாசை வரும் இரண்டு தினங்களுக்கு முன்பு மகா நந்திக்கு மஹா பிரேதோஷம் நடைபெறுவது வழக்கம்.

மாலை 4.30 மணியளவில் பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள், தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: கோட்டாட்சியர் அலுவலகத்தில் பல்லியை வாயில் கவ்வியபடி மரம் ஏறிய பாம்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.