ETV Bharat / state

தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு 894 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு

திருவண்ணாமலை மகா தீபத்தை முன்னிட்டு விழுப்புரம் மண்டலத்தில் இருந்து 894 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

special buses  Thiruvannamalai Maha Deepam  Special buses for Thiruvannamalai Maha Deepam  Thiruvannamalai  Villupuram  buses for Thiruvannamalai Maha Deepam  buses for Thiruvannamalai  Villupuram news  Villupuram latest news  கார்த்திகை தீபத்திருவிழா  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து  சிறப்பு பேருந்து  விழுப்புரம்  திருவண்ணாமலை  சிறப்பு பேருந்துகள்  பேருந்துகள்
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து
author img

By

Published : Dec 4, 2022, 3:02 PM IST

விழுப்புரம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை மகா தீபத்திருவிழாவும், 7-ம் தேதி பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்டு இருந்த நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகள் கழித்து, வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பேருந்துகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் போக்குவரத்து மண்டலம் சார்பாக நாளை (டிசம்பர் 5) முதல் 7-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பேருந்துகள், திண்டிவனம் - திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பேருந்துகள், புதுச்சேரி - திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பேருந்துகள், திருக்கோவிலூர் - திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பேருந்துகள், கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பேருந்துகள் என மொத்தம் 894 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்புப்பேருந்துகளின் இயக்கத்தை முன்னிட்டு, முக்கியப்பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும்; மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம்: கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.