திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள், ஆதரவற்ற விவசாயக் கூலி, கணவரால் கைவிடப்பட்டோர், இளம் கைம்பெண்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு 10 ஆயிரத்து 505 புதிய ஸ்மார்ட் கார்டுகளை வட்டாட்சியர் நரேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் முகமது கனி ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதன்மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை நியாயவிலைக் கடைகளில் இவர்கள் பெற முடியும் என்று வட்ட வழங்கல் அலுவலர் முகமது கனி தெரிவித்தார்.