ETV Bharat / state

ஏரிகுப்பம் சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்.. லட்சக்கணகான பக்தர்கள் சாமி தரிசனம்! - Yantra Saneeswara Bhagavan Temple

Yantra Saneeswara Bhagavan Temple: ஆரணி அருகே உள்ள ஏரிகுப்பம் யந்திர சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, பரிகார யாகம் நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Yantra Saneeswara Bhagavan Temple
தி.மலை ஏரிகுப்பம் யந்திர சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 10:33 PM IST

ஏரிகுப்பம் யந்திர சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்

திருவண்ணாமலை: ஆரணி அருகே உள்ள ஏரிகுப்பம் கிராமத்தில் யந்திர வடிவில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். இதில், யந்திர வடிவில் சனீஸ்வர பகவான் காட்சியளிப்பதால் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

மேலும், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி என்பதால், ஏரிகுப்பம் யந்திர சனீஸ்வர பகவான் கோயிலுக்கு திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். மேலும், நெய் விளக்கு ஏற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனிடையே இன்று(டிச.20) மாலை சுமார் 5.20 மணியிலிருந்து மகரம் ராசியிலிருந்து, கும்பம் ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் பெயர்வதால், யந்திர சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பரிகார பூஜை நடத்தப்பட்டன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு யந்திர சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.

அதேபோல், இன்று புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன. அதன்பின், ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காகம் வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடிக்கடி செந்நிறமாக மாறும் புதுச்சேரி கடல்நீர்.. நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.