திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டுவருவதாக மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியானந்தனுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கெடாத்தாங்கல் ஏரியில் செங்கல் சூலைக்கு மணல் கடத்திய லாரியை மடக்கிப்பிடித்து பறிமுதல்செய்து, ஓட்டுநர் சக்திவேல் (23), லட்சுமணன் (25) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர் .