திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் மேல்நகர் கீழ்நகர் பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து. தகவலறிந்த காவல் துறையினர், கடந்த 17ஆம் தேதி கீழ்நகர் கிராமத்தில் உள்ள நாகநதி ஆற்றுப் பகுதிக்குச் சென்றனர்.
அப்போது சுதாகர் என்பவர் டிராக்டரை விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த கண்ணமங்கலம் காவல் நிலைய காவலர்கள், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுதாகரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாகியிருந்தத் தனிப்படை காவல்துறையினர் நேற்று (மே.30) சுதாகரை கைது செய்தனர். கைதான சுதாகரிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் விசாரணை நடத்தினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றிற்கு, மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சுதாகர் பேட்டி அளித்திருந்தார். அதில்," காவல்துறையினர் 23 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். நான் மணல் வியாபாரத்தை கைவிட்டுவிட்டேன். இருப்பினும், என்னை மணல் கடத்துமாறு, கண்ணமங்கலம் காவல் துறையினர் கட்டாயப்படுத்தி, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எண்ணிடமிருந்து வாங்கினர்.
மொத்தம் 23 வண்டிகள் மணல் அள்ளுகின்றனர். ஒரு வண்டிக்கு ஒரு லட்சம் வீதம், மொத்தம் 23 லட்சம் ரூபாய் ஒரு மாதத்திற்கு வசூலாகிறது. நான் அமைதியாக இருந்தேன். என்னை மணல் கடத்தத் தூண்டிவிட்டதோடு, என்னிடம் மேலும் பணம் கேட்கின்றனர். இதற்கு நான் எங்கே போவது’’ என, அதில் குறிப்பிட்டிருந்தார்.
கண்ணமங்கலம் காவல் நிலையத்தில், சுதாகர் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மண்ணில்லாமல் தேங்காய் நார்களில் விளையும் காய்கறிகள்!