திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மினி பிக்கப் வாகனத்தில் ஆற்றிலிருந்து மணலைக் கடத்தி வெளிச் சந்தையில் விற்கப்படுவதாக, செங்கம் காவல் துறை கண்காணிப்பாளரின் தனிப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில் ஓடையிலிருந்து மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் வாகனத்தைப் பறிமுதல் செய்து தனிப்படை காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்தப் பகுதியில் மினி வாகனத்தில் ஆறு, ஓடைகளிலிருந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது என்றும், காவல்துறையினர் இரவு நேரம், அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபடாததே, இதுபோன்று நூதன முறையில் மணல் கடத்துவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கம் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற தடையை மீறி முதலமைச்சர் வருகைக்காக ஆற்றில் மணல் அள்ளும் மாவட்ட நிர்வாகம்!