திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாய்பாபா திருக்கோயிலில் அக்ஷய ஸ்ரீ சாய் பத்தாம் ஆண்டு திருவிழாவையொட்டி இன்று காலை 6 மணி முதல் அபிஷேகம் மற்றும் அலங்காரம், ஆரத்தி, அன்னதானம், கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு வஸ்திரங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
அக்ஷய ஸ்ரீ சாய் திருவிழாவின் ஒரு பகுதியாக 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவல பாதையை சாய்பாபா புனித அலங்கார பல்லக்கு வாகனம் மூலமாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது.
இந்த விழாவை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள புனித விவேகானந்தர் இல்லம் முதல் மெரினா கடற்கரை நோக்கி நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் மழை வளம், மலை வளம், இயற்கை மரங்களை பாதுகாத்து மூலிகை ஆதாரங்களான வேம்பு, வில்வம் மற்றும் துளசி ஆகியவற்றை வைத்து கடல் நீரை மூலிகை குடிநீராக மாற்ற வேண்டி சமுதாய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் கலந்து கொண்டு மெரினா கடற்கரை வரை நடை பயணமாக வந்தனர்.