பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத பௌர்ணமி உண்டியல் திறந்து கணக்கிடப்பட்டது. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இந்தக் காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 200 பேர் ஈடுபட்டனர்.
அந்த வகையில் ஒரு கோடியே 33 லட்சத்து 42 ஆயிரத்து 497 ரூபாய் ரொக்க வருமானம் கிடைத்தது. இதுதவிர 88 கிராம் தங்கம் 707 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைக்கப்பெற்றது.
இந்தத் தகவலை திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் கூறினார்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ.5.71 கோடி!