ETV Bharat / state

1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம்: நேரில் பார்வையிட்ட அருங்காட்சியக ஆணையர்! - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் அருங்காட்சியகத்தை, தமிழ்நாடு அருங்காட்சியக ஆணையர் சண்முகம் பார்வையிட்டார்.

அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஆணையர்
அருங்காட்சியகத்தை பார்வையிட்ட ஆணையர்
author img

By

Published : Sep 17, 2020, 8:17 PM IST

திருவண்ணாமலை: வேங்கிக்கால் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அருங்காட்சியக ஆணையாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை நகரிலுள்ள வேங்கிக்கால் பகுதியில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை தமிழ்நாடு அருங்காட்சியகங்கள் ஆணையாளர் சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆணையாளர் சண்முகம் கூறியதாவது, “அருங்காட்சியகம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. மேலும், எந்தெந்த வகையான அரும் பொருள்களை இங்கு வைக்கலாம், கரோனா கட்டுப்பாடுகள் முடிந்த பிறகு இங்கு என்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாம் என்பது குறித்து ஆலோசித்து அதனை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்ட பகுதியிலுள்ள அரும் பொருள்களை வைப்பதற்கு முடிவு செய்துள்ளோம். மேலும், கூடுதலாக சில பொருள்களை சென்னை அருங்காட்சியகம் உள்ளிட்ட வேறு சில அருங்காட்சியகத்திலிருந்து பொருள்களை எடுத்துவந்து இங்கு வைக்கவுள்ளோம். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அனைத்து பணிகளும் அருங்காட்சியகத்தில் நிறைவுபெறும்.

இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூடுதல் தகவல்கள், பார்க்க முடியாத கூடுதல் காட்சியகங்கள், காணமுடியாத விஷயங்கள் ஆகியவற்றை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் காட்டுவதற்கு வழிவகை செய்யப்படும்.

இந்த அருங்காட்சியகம் முன்மாதிரியான அருங்காட்சியமாக ஏற்படுத்தப்படும். பணிகள் நிறைவுபெறும்போது தமிழ்நாட்டிலேயே மிகச்சிறந்த ஒரு அருங்காட்சியகமாக திருவண்ணாமலை அருங்காட்சியகம் திகழும்” என்றார். முன்னதாக 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக திறக்கப்பட்ட அறிவியல் பூங்காவினை ஆணையர் சண்முகம், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: வேகமெடுக்கும் கீழடி அருங்காட்சியக பணிகள் - ஜூலை 20இல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.