ETV Bharat / state

வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை! - 10 சவரன் நகை 70000 பணம் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த தம்பதியினரை தாக்கிய கொள்ளை கும்பல், 10 சவரன் தங்க நகை, 70 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

tvm
கொள்ளை
author img

By

Published : Mar 29, 2023, 6:43 PM IST

தனியாக வசித்த தம்பதியை தாக்கிவிட்டு கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வெங்கடாசலபதி அதே ஊரில் மாவு மில் நடத்தி வருகிறார். இவரது மனைவி பிருந்தா. இந்த தம்பதியினர் கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று(மார்ச்.28) நள்ளிரவில் இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கதவு தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் கதவைத் திறந்து பார்த்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல், குரங்கு குல்லா அணிந்து கொண்டு நின்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, அந்த கும்பல் இரும்புக்கம்பியால் தம்பதியினரை தாக்கி, பீரோ சாவியை கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர். உயிருக்கு பயந்து போன தம்பதியினர் சாவியை கொடுத்துள்ளனர். பின்னர் அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 2.5 கிலோ வெள்ளி மற்றும் 70 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஏடிஎம் கொள்ளைச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஒரே இரவில் 4 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

கேஸ் கட்டர்களை வைத்து ஏடிஎம் இயந்திரங்களை வெட்டி கொள்ளையடித்துவிட்டு, தடயங்களை அழிப்பதற்காக ஏடிஎம் மையங்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த கொள்ளை கும்பல் நாடு முழுவதும் பல இடங்களில் இதே பாணியில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: EXCLUSIVE: 'பெர்டோ' ஏடிஎம் தான் டார்கெட்.. ஓராண்டில் 10 இடங்களில் ஒரே பாணியில் கைவரிசை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.