திருவண்ணாமலை மாவட்டம், நகர் பகுதியில் உள்ள காமராஜர் சிலை, அரசு கால்நடை மருத்துவமனை ஆகியப் பகுதிகளில் சாலைகளின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் நின்று கொண்டும், படுத்துக் கொண்டும் இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கால்நடை மருத்துவமனை வளாகம் முன்பு மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதுவே அப்பகுதியில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது.
இதனிடையே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் பேருந்துகளில் உள்ள பூமாலைகள், பூங்கொத்துக்களை கால்நடைகள் சென்று பிய்த்து எரிந்து, உண்டு விட்டுச் செல்கின்றன.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் கால்நடைகள் ஆங்காங்கே நின்று, படுத்துக் கொண்டு இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
விபத்துகள் ஏற்படும் முன், கால்நடைகளை சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தி வருங்காலத்தில் இனிமேல் போக்குவரத்திற்கு இடையூறு செய்யாத வண்ணம் பராமரிப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:
போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் - நடவடிக்கை எடுத்த ஆட்சியர் உமா மகேஸ்வரி!