திருவண்ணாமலை மாவட்டம் விஸ்வந்தாங்கல் ஊராட்சியில் பொதுக்கிணறு ஒன்று, சுமார் முப்பது வருடங்களாக பயன்பாடு இல்லாத நிலையில் உள்ளது. இந்தக் கிணற்றில் இதுவரை கன்றுக்குட்டிகள், ஆடுகள் விழுந்து காயமடைந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்கள் மிகவும் சிறியதாக இருப்பதால் சிறுவர், சிறுமியர் கிணற்றில் விழும் சூழல் உள்ளது. ஆகவே, கிணற்றை உடனடியாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகை அருகே ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!