ETV Bharat / state

திருவண்ணாமலையில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 602 குடும்பங்களுக்கு நிவாரணம்! - அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை: கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

minister
minister
author img

By

Published : Mar 30, 2020, 9:01 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலசபாக்கம், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், "திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு குறித்து கண்டறிய மாவட்டம் முழுவதும் 33 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு மருத்துமனை ஆகியவற்றில் தலா 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையை பொறுத்தவரையில், இதுவரை 24 நபர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு இல்லை. மீதமுள்ள 13 நபர்களுக்கான ஆய்வறிக்கை விரைவில் அறிவிக்கப்படும்.

அமைச்சர் தலமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித் திரிந்த 1710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1, 917 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1652 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோ, 22 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 1,711 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 11 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

7 லட்சத்து 42 ஆயிரத்து 602 குடும்ப அட்டைகளுக்கு அரிசி கோதுமை மற்றும் அரசு தரும் நிவாரண நிதியாக 1000 ரூபாய் வழங்க உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிக் டாக் பதிவிட்ட கரோனா நோயாளி : ஒரே நாளில் 4 சோக கீதங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.