ETV Bharat / state

சொத்து தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கண்மூடித்தனமான  தாக்குதல் - சொத்து தகராறு

திருவண்ணாமலை: ஆண்டிபட்டியில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைக் கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

தாக்குதல்
தாக்குதல்
author img

By

Published : Jul 6, 2020, 3:29 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் - கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கிடையே நிலத்தகராறு நிலுவையில் இருந்து வந்தது.

இது சம்பந்தமாக ஒரு தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவின்படி நிலம் செல்லுபடி ஆகும் என அறிவிப்பு வந்ததாக கிருஷ்ணமூர்த்தியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அருணாச்சலத்திற்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அருணாச்சலத்திற்குச் சொந்தமான மாடு ஒன்று நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது, கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் அதை அவிழ்த்துக்கொண்டு, தங்களது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் கட்டி வைத்துள்ளனர்.

இதனைக்கண்ட அருணாச்சலம், அவரது மனைவி பூங்கொடி இருவரும் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்குச் சென்று, தனக்குச் சொந்தமான மாட்டை எதற்காக அவிழ்த்து வந்தீர்கள் எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனைக் கண்ட அருணாச்சலத்தின் மகள்கள் சுபாஷினி, ரம்யா, மகன் பாரதி, மருமகள் பிரியா ஆகியோர் தடுக்கச் சென்ற போது கைகலப்பு மோதலாக மாறியது.

இதில், கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் பச்சையப்பன், இளையராஜா, சுரேஷ், வினோத்குமார் உள்ளிட்டோர் உருட்டுக்கட்டையுடன் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை கண்மூடித்தனமாக கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பூங்கொடி, ரம்யா, பாரதி, சுபாஷினி, பிரியா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்பு பூங்கொடி, ரம்யா, பாரதி ஆகியோரை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக மேல் செங்கம் காவல் ஆய்வாளர் மலர் நேரில் வந்து படுகாயம் அடைந்தவர்களை விசாரணை செய்தார். அப்போது நிலத்தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.