உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் வரும் 21ஆம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா சிவராத்திரி அன்று நடைபெறவிருக்கும் பிரமாண்ட திருமுழுக்கிற்காகவும், லிங்கோத்பவர் நிகழ்வு என்று சொல்லக்கூடிய 'அடிமுடி காணா அண்ணாமலை' நிகழ்ச்சியைக் காண்பதற்காகவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
அதற்கு முன்னேற்பாடாக கோயிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டுள்ளது. கோயிலின் சிவனடியார்கள் குழு தலைமையில் நடைபெறும் இப்பணி தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெறவிருக்கிறது.
குறிப்பாக ஒன்றாம் பிரகாரத்திலுள்ள லிங்கோத்பவர் சன்னதியை சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியை முன்னிட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி தொடக்கம்!