ETV Bharat / state

கார்த்திகை தீபத் திருவிழா... அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கு தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 7, 2022, 8:01 AM IST

திருவண்ணாமலை : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாபத்து நாட்களுக்கு மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா உட்பட்ட வேடந்தவாடி, கருங்காலிகுப்பம், வேட்டவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகல் விளக்கு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்தாம் நாளான டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. அந்நாளில் பொதுமக்கள் வீடுகளில் அகல் விளக்கேற்றி வழிபடுவார்கள்.

கார்த்திகை தீபத் திருவிழா... அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

இதற்காக அகல்விளக்கு செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் அகல் விளக்கு செய்யும் பணி பாதிப்படைவதாகவும் தற்பொழுது மழையின் அளவு குறைந்துள்ளதால் அகல்விளக்கு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நவீன கால வளர்ச்சி காரணமாக மண்பாண்ட தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு மானியத்தில் மின் உபகரணங்கள், இலவச மின்சாரம் வழங்கி தங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?: மூக்கில் விரல் வைக்கும் பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.