திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (ஏப். 9) அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
மேலும் நந்தி பகவானுக்கு அரிசிமாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் திருவிழா