பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜன.14) முதல் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களின் விற்பனையும் களைகட்டியுள்ளது. தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் தினத்தன்று மஞ்சள் கொத்து கட்டி, பானையில் புதிய அரிசியில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.
இதனால் பொங்கல் பண்டிகையின்போது மஞ்சள் செடி விற்பனையும் நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொளக்குடி, உடையானந்தல், கண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பொங்கல் அறுவடைக்காக மஞ்சள் பயிரிட்டுள்ளனர்.
தற்போது பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் செடிகளை பெங்களூரைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்து, விற்பனை செய்வதற்காக சரக்கு வாகனம் மூலம் ஏற்றி செல்லும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தின்போது விக் வைத்து ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை கோரி மனைவி புகார்!