திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் அருகே உள்ள திருமலை சமுத்திரம் ஏரி 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிவது வழக்கம். இந்த நாய்கள் இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் மது அருந்த வருவோருக்கு தொல்லை கொடுத்துள்ளன. இதனால் மது அருந்த வரும் கும்பல் கோழி இறைச்சியில் விஷம் வைத்து நாய்களுக்கு கொடுத்துள்ளது. இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்தன.
இந்த சம்பவம் குறித்து சமூக வளைதளங்களில் சர்ச்சை கிளம்பியுள்ளது. அப்பகுதி விவசாயிகள், நாள்தோறும் பல கும்பல் விவசாய நிலங்கள் அருகே மது அருந்திவிட்டு, பாட்டிலை அங்கேயே போட்டு செல்கின்றன. இப்போது நாய்களை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிட்டன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் கறுப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்