ETV Bharat / state

குப்பநத்தம் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

author img

By

Published : Feb 26, 2020, 3:05 PM IST

திருவண்ணாமலை: துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே உள்ள குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டது.

kuppanatham dam
kuppanatham dam

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே உள்ள குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பாசனத்திற்காக நீரை திறந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

குப்பநத்தம் நீர்த்தேக்கம் 43.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2008ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கத்திற்கு 225.96 சதுர கிலோ மீட்டர் நீர் பரப்பளவு உள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 59.04 அடி, அணையின் முழு கொள்ளளவு 700 மில்லியன் கன அடியாகும். தற்போது அணையின் நீர் மட்ட உயரம் 35 அடியாகவும், அதன் கொள்ளளவு 222 மில்லியன் கன அடியாகவும் உள்ளன.

அணையில் தேக்கப்படும் நீர் நேரடியாக செய்யாற்றில் திறந்துவிடப்பட்டு அதன் மூலம் கீழே உள்ள ஐந்து அணைக்கட்டுகளின் வாயிலாக மொத்தம் 47 ஏரிகளின் மூலம் 9 ஆயிரத்து 810 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. குப்பநத்தம் அணையின் மூலம் செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பெண்ணாத்தூர், கலசபாக்கம், போளூர் வட்டங்களைச் சேர்ந்த 40 கிராமங்கள் பயனடைகின்றன.

இந்த நீர்த்தேக்கத்திலிருந்து செங்கம், தோக்கவாடி ஏரிகளுக்கும் பாசனத்திற்கும் மற்றும் 32 கிலோமீட்டர் தொலைவில் இறையூர் அணைக்கட்டு வரை உள்ள குடிநீர் ஆதாரங்களுக்கு நிலத்தடி நீர் செறிவூட்டப்படுகிறது. இதன் மூலம் இன்று முதல் மார்ச் 2ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வினாடிக்கு 240 கன அடி வீதம் 103.93 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 795.31 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையை திறந்து வைத்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

மேலும், பாசன நீரை சிக்கனமாகவும், சிறந்த முறையில் பயன்படுத்தி, நல்ல விளைச்சல் பெற்றிட விவசாயிகள் அனைத்து வகையிலும் ஒத்துழைக்க அமைச்சர் அவர்கள் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் பாதுகாப்பானது - பிரேமலதா விஜயகாந்த்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.