திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள உண்ணாமலை உடனுறை அண்ணாமலையார் கோயில், பஞ்ச தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது. சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்றத் தலமான இங்கு, கடந்த, 2017ஆம் ஆண்டு, பிப்., 6ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், கும்பாபிஷேக வருடாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதன்படி நான்காம் கும்பாபிஷேக வருடாபிஷேக விழா அண்ணாமலையார் கோவிலில் இன்று (ஜன.24) நடைபெற்றது.
வருடாபிஷேகத்தை ஒட்டி இரவு விநாயகர், சந்திரசேகரர் மாடவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிங்க: கொடைக்கானலில் நிறுத்தியிருந்த வாகனத்துக்கு மதுரையில் அபராதம்: அதிர்ந்து போன வாகன உரிமையாளர்!