ETV Bharat / state

கார்த்திகை தீபத் திருவிழா - 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி! - கார்த்திகை தீபத் திருவிழா 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Deepam festival
author img

By

Published : Nov 14, 2019, 10:01 PM IST

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பல்வேறு துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ‘கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 15 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ கட்டணம் 20 ரூபாயாகவும், அதற்கு மேல் சென்றால் 25 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 13 நிலையான மருத்துவ முகாம்கள் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவையொட்டி 8,500 காவலர்களும், 447 தீயணைப்பு வீரர்களும், 29 தீயணைப்பு வாகனங்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே 119 இடங்களிலும், உள்ளே 237 இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபம்: பக்தர்களின் வசதிக்காக 2,500 சிறப்புப் பேருந்து!

Intro:பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு, மலையின் மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேட்டி.
Body:பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு, மலையின் மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேட்டி.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2019க்கான அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் கந்தசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10ம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான தயாரிப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 15 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.24 ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்கான வசதிகளை ஆறு இணையதளம் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு செல்ல 125 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 14 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2.5 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோ கட்டணம் 20 ரூபாயாகவும், அதற்கு மேல் சென்றால் 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 13 நிலையான மருத்துவ முகாம்கள் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8500 காவல்துறையினர் 447 தீயணைப்பு வீரர்கள், 29 தீயணைப்பு வாகனங்கள், கோயிலுக்கு வெளியே 119 இடங்களிலும், உள்ளே 237 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். ஏழு இடங்களில் மட்டும் அன்னதானம் செய்ய அனுமதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு துறையினர் கண்காணிப்பில் அன்னதானம் வழங்கப்படும். துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் 6 தங்க நாணயங்களும் 72 வெள்ளி நாணயங்களும் அளிக்கப்படும். மேலும் 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Conclusion:பாதுகாப்பு பணியில் 8,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு, மலையின் மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பேட்டி.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.