திருவண்ணாமலை: திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் மின்சாரம் இரு்ககாது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மின்சாரம் இருக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை ஆதரித்து வாக்கு சேகரித்த சி.டி. ரவி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக- அதிமுக கூட்டணி மக்களின் நண்பன் என தெரிவித்தார். திமுக மக்களின் எதிரி என்றும் அவர் கூறினார்.
ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி திமுக என்றும், கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் திமுகவில்தான் உள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்தது பாஜகதான் என குறிப்பிட்ட அவர், 234 தொகுதிகளில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்றார்.
இதையும் படிங்க: -1 கோடியிலிருந்து +44 கோடிக்கு சென்ற விஜயபாஸ்கர் சொத்து! - அறப்போர் இயக்கம்