ETV Bharat / state

ஊரடங்கு: தொடரும் கள்ளச்சாராய கலாசாரம்! - கரோனா ஊரடங்கு

திருவண்ணாமலை: விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த கள்ளச்சாராயத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், இது தொடர்பாக 11 பேரை கைதுசெய்துள்ளனர்.

தொடரும் கள்ளச்சாராய கலாச்சாரம்
தொடரும் கள்ளச்சாராய கலாச்சாரம்
author img

By

Published : Apr 30, 2020, 10:04 AM IST

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்படி, வேட்டவலம் அருகே வைப்பூர் கிராமம் கரடி மலைக்குக் கிழக்கே உள்ள கல்லாங்குத்தினிடத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் டேங்கில் பூமியில் புதைத்துவைத்திருந்த சாராய ஊறலைக் கண்டுபிடித்து ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டியெடுத்து அழித்தனர்.

வேட்டவலம் அருகே இருளர் காலனி கிராமத்தில் 110 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த ராஜி, தங்கராஜ் ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ஊரடங்கு: தொடரும் கள்ளச்சாராய கலாசாரம்!

மேலும் 500 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் கைப்பற்றினர். அதுமட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஒன்பது பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க...தேனி அருகே வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.