திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமப் பகுதியைச் சேர்ந்த பெருமாள் தீயணைப்புத் துறையில் பணியாற்றிவருகிறார்.
இவருக்கும், உறவு பெண் மைதிலி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மைதிலி என்பவர் சிங்காரப்பேட்டை அருகே உள்ள பெரியதள்ளபடி பகுதியை ச்சேர்ந்தவர் என்றும் இவர் சேலத்திற்கு திருமணமாகிய நிலையில் தனது தாய் வீட்டிற்கு வந்து செல்லும்போது, உறவினர் பெருமாள் வீட்டிற்கு வந்துசெல்லும் அளவிற்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த மைதிலியின் கணவர், உறவினர்கள் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் இவர்களது பழக்கம் நீடித்துச் சென்ற நிலையில், நேற்று (செப்.7) பெருமாள் வீட்டு முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கொளுத்திவிட்டு தப்பி ஓடியதாகத் தெரிகிறது
இதனையடுத்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன், மேல்செங்கம் காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பின்னர் பெருமாளை பத்திரமாக மீட்டு மேல்செங்கம் ஆய்வாளர் மலர் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.
மண உறவைத் தாண்டிய காதலால் காருக்கு தீவைப்பு! - Car fire in triuvannamalai
திருவண்ணாமலை: மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் மண உறவைத் தாண்டிய காதல் விவகாரத்தால், வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த காரை அடையாளம் தெரியாத நபர்கள் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.