ETV Bharat / state

'அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்தேன்'- வைரலாகும் ஆடியோ!

author img

By

Published : Aug 1, 2020, 12:22 PM IST

திருவண்ணாமலை: குடிமராமத்து பணி டெண்டருக்காக அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என ஒப்பந்ததாரர் ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

வைரலாகும் ஆடியோ
வைரலாகும் ஆடியோ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி ஏரி குடிமராமத்து பணிக்கு டெண்டர் விடப்பட்டு ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த டெண்டரை ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மாதவன் என்பவர் எடுக்க முன்வந்த போது தோக்கவாடி, ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் சங்கர் மாதவன் அதே பகுதியைச் சேர்ந்த கோளன் என்பவரது பெயரில் டெண்டரை எடுத்து, பணிகளை உதவியாளர் குமார் என்பவரை வைத்து செய்துவருகிறார்.

அவரின் டெண்டர் பணிகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சங்கர் மாதவன் இந்த டெண்டரைக் கைப்பற்றுவதற்காக அமைசருக்கு ரூ. 21 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என பேசியது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாக பரவிவருகிறது. அதன்காரணமாக பொதுமக்கள் தோக்கவாடி ஏரியை தொடர்ந்து, கரியமங்கலம் ஏரி உள்ளிட்டப் பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களையும் சங்கர் மாதவன் லஞ்சம் கொடுத்து பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

வைரலாகும் ஆடியோ

மேலும் தரமற்றப் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எந்த ஒரு ஆதாரமும் இன்றி அமைச்சருக்கு 21 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறும் அவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் லஞ்சம்: ஊழியர் பணியிட மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.