திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று(ஜன.2) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் கருவறையின் பின்புறம் உள்ள வேணுகோபால சுவாமி சன்னதியில் வேணுகோபால சுவாமி, பாமா, ருக்குமணிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றது.
அதிகாலை 5.40 மணியளவில் கோயிலின் வைகுந்த வாயில் திறக்கப்பட்டு சிறப்பு தீபஆராதனை நடைபெற்றது. வைகுண்டத்தின் வாயில் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைந்து அண்ணாமலையார் மற்றும் வேணுகோபால சாமிகளை தரிசனம் செய்தனர் . தமிழ்நாட்டிலேயே சிவ ஸ்தலங்களில் வைகுண்ட வாயில் திறப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க:வைகுண்ட ஏகாதசி; மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வீர நரசிம்ம பெருமாள்