ETV Bharat / state

தளவாய்குளம் சந்தையில் ரூ.1 கோடி வரை விற்பனையான ஆடு, கோழி!

author img

By

Published : Oct 23, 2022, 7:24 PM IST

தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள தளவாய்குளம் சந்தையில் ஆடு, கோழி ரூ.1 கோடி வரை விற்பனை ஆகியுள்ளது.

தளவாய்குளம் சந்தையில் ரூ.1 கோடி விற்பனையான ஆடு, கோழி...

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த தளவாய்குளம் கிராமத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கால்நடை மற்றும் காய்கறிச்சந்தைகள் நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான மாடுகள், ஆடுகள், கோழிகள், மற்றும் காய்கறிகள் விற்பனை ஆகிவரும்.

இந்நிலையில் நாளை தீபாவளிப் பண்டிகையினை முன்னிட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் 2 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கோழிகள் ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. தளவாய்குளம் சந்தையில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடு மற்றும் கோழி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

வெள்ளாடு, நாட்டு குறும்பாடு, மலைச்சேரி ஆடு உள்ளிட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. கடந்த வாரங்களில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.7,000 வரை விற்பனையான நிலையில் இந்த வாரம் சுமார் ரூ.2,000 விலை அதிகரித்து ரூ.7,500 முதல் 9,000 வரையில் பத்துகிலோ எடை கொண்ட ஆடுகள் விற்பனையாகி உள்ளன. மேலும் கோழிகள் கூடுதலாக ரூ.200 வரை விற்பனையானது.

தளவாய்குளம் சந்தையில் ரூ.1 கோடி வரை விற்பனையான ஆடு, கோழி!

பின்னர் காலை முதல் பொதுமக்களும், வியாபாரிகளும் ஆடு, கோழிகளை வாங்க குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஆடு மற்றும் கோழி விற்பனை ஆகியுள்ளது.

இதையும் படிங்க:கோவை கார் விபத்து - திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.