ETV Bharat / state

திருவண்ணாமலை சாலையில் தத்ரூபமான கரோனா ஓவியம்!

திருவண்ணாமலை : கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செங்கத்தில் மக்களின் பார்வைக்காக தத்ரூபமான பிரம்மாண்ட ஓவியம் ஒன்று வரையப்பட்டது.

corona virus
corona virus
author img

By

Published : Apr 30, 2020, 12:13 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கரோனாவின் தாக்கம் குறித்து தெரியப்படுத்தும் விதமாகச் செங்கம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் விழிப்புணர்வு ஓவியம் ஒன்றை வரைய உத்தரவிட்டார்.

அதன்படி, செங்கம் காவல்துறை மற்றும் செங்கம் ஓவியர் சங்கம் இணைந்து கரோனா என்னும் அரக்கன் உலகத்தை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு இருப்பதாகவும், இந்தக் கொடிய அரக்கனிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள அரசு சொல்லும் விதிமுறைகள் 'விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு' எனும் வாசகத்தை விளக்கும் விதமாக தத்ரூபமாக ஓவியம் வரையப்பட்டது.

ஓவயங்களை வரையும் கலைஞர்கள்
ஓவயங்களை வரையும் கலைஞர்கள்

இதையடுத்து, செங்கம் காவல்நிலைய ஆய்வாளர் சாலமன் ராஜா முன்னிலையில், துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் இன்று கரோனா ஓவியத்தைப் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.

இந்த ஓவியத்தை தத்ரூபமாக வரைவதற்கு உதவி புரிந்த ஓவியர்கள் மதன், பிச்சைக்காரன், நாகேந்திரன், ஜெயம் மற்றும் விமல் ஆகியோருக்கு துணை காவல் கண்காணிப்பாளர் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

கலைஞர்களின் கைவண்ணிதில் உருவான ஓவியம்
கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியம்

இதையும் படிங்க : கட்டுப்பாட்டு பகுதியிலிருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் 250 கிராம் கிருமி நாசினி பவுடர் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.