திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றவரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து, அவர் வைத்திருந்த ரூ.1.50லட்சத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக அவர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிபடையினர் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதே பகுதியில் வந்த இரண்டு லாரிகளை வழிமறித்து சோதனை செய்த போது, லாரியில் இருந்த ஐந்து பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தில், நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்படும் வானகங்களின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்து தெரியவந்து. அவர்களிடம் இருந்து ரூ.12லட்சம் மதிப்பிலான பொருட்கள், இரண்டு லாரி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.