திருவண்ணாமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள குப்பநத்தம் துரிஞ்சாபுரம் நாமக்கல் நீர்வீழ்ச்சியில் நேற்றைய முன் தினம் (நவ.4) சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்தது.
எவ்வித பாதுகாப்பும் இல்லாத இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென ஏற்பட்ட காட்டு வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களைக் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாத நீர்வீழ்ச்சிக்குப் பொதுமக்கள் சென்றதால் இது போன்ற சம்பவம் ஏற்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு