ETV Bharat / state

கொளுத்தும் வெயிலில் விவசாயிகள் வேர்க்கடலை அறுவடை - மணிலா வேர்க்கடலை அறுவடை செய்யும் விவசாயிகள்

திருவண்ணாமலை: உடலுக்குத் தேவையான புரதச்சத்து தரும் மணிலா வேர்க்கடலையை விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனர்.

ground nut flour
ground nut flour
author img

By

Published : May 31, 2020, 5:06 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் மேல்கரிப்பூர் கிராமத்தில் மணிலா என்று அழைக்கப்படும் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இதனை மூன்று பட்டங்களில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், மாசிப் பட்டம் என மூன்று பட்டங்களில் தண்ணீர் இருப்பை பொறுத்து மணிலா வேர்க்கடலை பயிரிடப்படுகிறது.

வேர்க்கடலை செடி
வேர்க்கடலை செடி

தற்போது, பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலைகளை அறுவடை செய்யப்படும் பணி செய்யப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள், சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேர்க்கடலையை அறுவடை செய்து வருகின்றனர். தற்போது அறுவடை செய்யப்படும் மணிலா வேர்க்கடலை அடுத்த சாகுபடிக்கு மிஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

வேர்க்கடலை அறுவடை செய்யும் விவசாயிகள்

கோடை வெயிலால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், கூலி போக தங்களுக்கு மிஞ்சுவதே கடினம்தான் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், செடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேர்க்கடலையை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வெறித்த நிலத்தில் இயற்கை முறையில் திராட்சைப் பயிர்; கலக்கும் விவசாயி சுருளிராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.