திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது ஏரிக்கரையில் உள்ள பழைய பாசன மதகுகள், ஏரிகளிலிருந்து வரும் உபரிநீர் காேடி, கால்வாய் பழுது நீக்குதல், ஏரிக் கரையை பலப்படுத்துதல், கால்வாய்களை தூர் வாருதல், முட்புதர்களை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த ஏரி 30 ஆண்டுகளுக்கு முன்பு தூர் வாரப்பட்டது. அதன் பிறகு தற்போது அதிமுக அரசு குடிமராமத்து பணியால் ஏரிகள் தூர்வாரப்பட்டுவருகிறது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும், குடிநீர் தட்டுப்பாடுகள் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வரத்து கால்வாய் மூலம் தண்ணீர் தடையின்றி வர வழிவகை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்திட்டம் கொண்டுவந்ததால் தங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடிமராமத்து பணி: ஸ்டாலினுக்கு புள்ளி விவரத்துடன் பதிலளித்த அமைச்சர்