திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த பூதமங்கலம் பகுதியில் சுமார் 3 மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை முறையாக வாங்காமல் வியாபாரிகளுக்குச் சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
பூதமங்கலம் பகுதியைச் சுற்றி உள்ள ஆனந்தல், வேடந்தவாடி, துருவம், ஆர்ப்பாக்கம், கருமாரப்பட்டி, எரும்பூண்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நம்பிதான், தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளைக் கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்களின் இரத்தத்தை வேர்வையாக சிந்தி, உழைத்து அரும்பாடுபட்டு கொண்டு வந்த நெல் மூட்டைகளை, வாங்க அதிகாரிகள் முறையாக வராமல் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை மட்டும் வாங்கி, வியாபாரிகளுக்குச் சாதகமாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல், மோசடி செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கெனவே 20 நாட்களுக்கு முன்பு, விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள், அதிகாரிகள் வராமல் எடைபோடாமல் வெயிலிலும் மழையிலும் பாதிப்படையும் நிலையில் உள்ளன.
இதனால் நெல் கொள்முதல் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வியாபாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அதிகாரிகள் முறையாக வந்து நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத்திட்டம்: நிபந்தனைகளை மதிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை தேவை!
நெல் மூட்டைகளை வாங்க அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை! - Farmers' indictment
திருவண்ணாமலை: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் முறையாக நெல் வாங்க வராததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
![நெல் மூட்டைகளை வாங்க அதிகாரிகள் வராததால் விவசாயிகள் வேதனை! வெயிலிலும் மழையிலும் பாதிப்படையும் நெல் மூட்டைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7277431-thumbnail-3x2-tvm.jpg?imwidth=3840)