ETV Bharat / state

ஹாட்ரிக் வெற்றியில் திமுகவின் எ.வ.வேலு!

திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து பலம் வாய்ந்தவராக திகழும் திமுகவின் எ.வ.வேலு, இந்த தேர்தலில் அபார வெற்றிபெற்று தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

EV velu
எ.வ.வேலு
author img

By

Published : May 3, 2021, 12:46 PM IST

திமுகவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக ஏ.வ. வேலு திகழ்கிறார். அதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார். எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் ஜானகி அணியில் சேர்ந்தார். அதன்பின்னர் அதிமுகவில் சேர்க்கப்படாததால் திமுகவில் இணைந்தார். மாவட்டச் செயலாளர், அமைச்சர் என படிப்படியாக உயர்ந்து திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவராக இருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் அவர், திமுக ஆட்சியில் மாநில உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக எம்எல்ஏவாக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக, 2011ஆம் ஆண்டு, திமுகவிற்கு எதிராக மாநிலம் முழுவதும் எதிர்பலை வீசியபோதும் கூட 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

ஹாட்ரிக் வெற்றியில் திமுகவின் எ.வ.வேலு!

2016ஆம் ஆண்டு, அதே தொகுதியில் போட்டியிட்டு கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போது திருவண்ணாமலை திமுக தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இந்தநிலையில், மூன்றாவது முறையாக திருவண்ணாமலை தொகுதியில் களமிறக்கப்பட்டார்.

பணபலம் மிக்க வேட்பாளராக திகழும் அவரை தோற்கடிக்க அதிமுக, பாஜக கடும் முயற்சி மேற்கொண்டது. திருவண்ணாமலையில் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டபோது, வேலுவின் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோதிலும், தனிப்பட்ட செல்வாக்கு, சமுதாய வாக்குகள், பணபலம் ஆகிய காரணங்களால் ஹாட்ரிக் வெற்றியை தன்வசமாக்கியுள்ளார் எ.வ. வேலு.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.