திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கிராமிய உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், பெருங்குளத்தூர், போந்தை, நாராயண குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், லாரியின் ட்யூப்பில் 420 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, பதிவெண் இல்லாத ஐந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், மேல் திருவடத்தனுர் ஏரியில் டிராக்டர், ஜேசிபி மூலம் மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து வாகனங்களும், ஒரு யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 150 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கண்டுபிடிப்பு: குற்றவாளிக்கு வலைவீச்சு!