ETV Bharat / state

திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீ துர்கை அம்மன் காமதேனு வாகனத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.

துர்கை அம்மன் உற்சவம்
Deepa Thiruvizha-2019
author img

By

Published : Nov 29, 2019, 11:39 AM IST

உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலின் தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, துர்கையம்மன் கோயிலின் திருவிழா தொடங்கியது. குறிப்பாக, கார்த்திகைத் தீபம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்தாம் தேதி அன்று காலை நான்கு மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகைத் தீபத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, எல்லைக் காவல் தெய்வமான துர்கை அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு, காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.

திரளான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்த காட்சி

இதனைத் தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: சிறு விவசாயிக்குப் பெரிய உத்தரவாதம்.!

Intro:தீபத்திருவிழா 2019 துவக்கமாக காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ துர்கை அம்மன் காமதேனு வாகனத்தில் அருள்பாலித்தார்.
Body:தீபத்திருவிழா 2019 துவக்கமாக காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ துர்கை அம்மன் காமதேனு வாகனத்தில் அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.
கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்தாம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீப துவக்கமாக தீபத்திருவிழா  முதல் நிகழ்ச்சியாக எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது சுவாமி மாடவீதி வீதி உலா வந்தது. அது சமயம் திரளான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர். வண்ண வாண வேடிக்கையும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் சுவாமி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிஎங்கும் அர்ச்சனைகள் செய்து  வழிபட்டனர். இதனை தொடர்ந்து  இன்று 29ம்- தேதி பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறுகிறது.

Conclusion:தீபத்திருவிழா 2019 துவக்கமாக காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ துர்கை அம்மன் காமதேனு வாகனத்தில் அருள்பாலித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.