திருவண்ணாமலை நகரில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் கட்சியின் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் தெருமுனை பரப்புரையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் விவசாயிகள் என்ற போர்வையில் ஒரு சில நபர்களை வைத்து ஏற்பாடு செய்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் சித்தரித்து வருகின்றனர். விவசாயிகளின் சுதந்திரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார்.
ஆனால், மத்திய அரசின் சட்டங்கள் விவசாயிகளை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்குங்கள். வெறுமனே மக்களை அச்சப்படுத்தி பயமுறுத்துவது, கார்ப்பரேட்டுகள் உங்களை கைப்பற்றி விடுவார்கள் என்ற அச்சத்தை சொல்கிறார்களே தவிர, உண்மையில் இந்தச் சட்டத்தில் விவசாயிக்கு பாதிப்புகள் ஏதுமில்லை.
பொத்தாம் பொதுவாக சொல்கிறாரே தவிர, இதுபோன்ற பேச்சுக்கள் திமுக தலைவர்களுக்கு கைவந்த கலைதான், இதில் எ.வ.வேலு தவிர்க்க முடியாதவர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: சீமான் மருத்துவமனையில் அனுமதி