ETV Bharat / state

''கையில காசு வாயில தோசை; விரைவாக திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக'' - அமைச்சர் பெருமிதம்! - திருவண்ணாமலையில் பேசிய அமைச்சர் வேலு

“நேற்று தான் இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டித்தர இடத்தைப் பாருங்கள் என்று அமைச்சர் செஞ்சியிடம் கூறினேன். இன்று அவர் நேரில் வீடு கட்டுவதற்கான இடத்தை ஆய்வு மேற்கொண்டார். இந்த அரசு எவ்வளவு விரைவாக திட்டங்களை செயல்படுத்துகிறது பாருங்கள்” என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat அமைச்சர் எ.வ. வேலு பேச்சு
Etv Bharat அமைச்சர் எ.வ. வேலு பேச்சு
author img

By

Published : May 12, 2023, 7:45 PM IST

அமைச்சர் எ.வ. வேலு பேச்சு

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். திமுக அரசு இரண்டு ஆண்டுகள் முடித்து மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளதை கொண்டாடும் விதமாக வருவாய்த்துறை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத் துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட 12 துறைகளின் சார்பில் சுமார் 6ஆயிரத்து 779 பயனாளிகளுக்கு 15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 ரூபாய் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத்துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ''எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் அதிகாரிகள் தான், அப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த ஆட்சியைப் பாராட்டி பேசி உள்ளார்கள் என்றால் அதுதான் திமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமை. முதலமைச்சருக்கே கிடைத்துள்ள பெருமை.

எந்த ஆட்சி வந்தாலும் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எந்தெந்த முரண்பாடு வரும், என்ன ஏற்பாடுகள் வரும் என்று பல அதிகாரிகள் நினைப்பார்கள். இவர்கள் நெகட்டிவ் அதிகாரிகள். ஆனால், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எப்படியாவது அரசு திட்டங்களையும் மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற 100 விழுக்காடு சில அதிகாரிகள் முயற்சி எடுப்பார்கள். இவர்கள் பாசிட்டிவ் அதிகாரிகள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பாசிட்டிவ் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அதனால், திருவண்ணாமலை மாவட்டம் பலவகையில் பயனடைந்து வருகிறது.

நேற்று அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிநாடு தமிழர் வாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு வீடு கட்டித் தர இடம் ஒதுக்கித் தருகிறேன் என்று கூறினேன். எனது கோரிக்கையை ஏற்று, மறுநாளே இன்று இடத்தைப் பார்க்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்துள்ளார். இதைத்தான் கிராமத்திலே சொல்வார்கள் ‘கையிலே காசு, வாயிலே தோசை’ என்ற வகையில் இந்த ஆட்சியில் திட்டங்கள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்குவதும், நிலை உணர்ந்து கருணை காட்டுவதும், நடுநிலைத் தவறாது திராவிட மாடல் ஆட்சி நடத்துவதும், மக்களைப் பேணி காப்பதும் ஒரு அரசுக்கு அழகு என்ற வள்ளுவன் வாக்கை போல் திராவிடம் மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு வருபவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

ஏழை - பணக்காரன், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி, ஓட்டு போட்டவன் - ஓட்டு போடாதவன் என்று பாகுபாடு பாராமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் மனிதநேயம் கொண்ட முதலமைச்சராக ஸ்டாலின் திராவிட ஆட்சியை நடத்தி வருகின்றார்.

திராவிட நாடு ஆட்சி என்பது பெரியார், அண்ணா, கலைஞர் இந்த மூன்று பேரும் என்ன சிந்தித்தார்களோ அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம். அதிலும் நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் என பத்திரிகைகள் சொல்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் வரலாறு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழர்களின் வரலாறு என நாட்டுக்கு எடுத்துக்காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின்” என உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா‌. முருகேஷ், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'திமுக ஃபைல்ஸ் பார்ட்-2 ஜூலை முதல் வாரம் வெளியாகும்' - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.