ETV Bharat / state

மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி!

திருவண்ணாமலை: மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

district-level-sports-competition-for-physically-challenged-persons

author img

By

Published : Feb 20, 2020, 1:08 PM IST

திருவண்ணாமலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2019-2020ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் நேற்று (பிப். 19) மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதை திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெறக்கூடிய விளையாட்டுப் போட்டியில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டி, இரு கால்களும் ஊனமுற்றோருக்கு 100மீட்டர், சக்கர நாற்காலி போட்டி, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஷார்ட் பால், நின்ற நிலையில் தாண்டுதல், 50, 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், காதுகேளாதோருக்கான 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

மாற்றுத் திறனாளிகள் குழுவாக பங்கேற்கும் வகையில் டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், வாலிபால், கபடி போன்ற போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாற்றுத்திறனாளி பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: தயாராகும் மினி பெருஞ்சுவர்! 2ஆவது இரட்டை சதமடித்த ராகுல் டிராவிட்டின் மகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.