ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் வரும் 7ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை! - lord sivan

அண்ணாமலையார் கோயிலில் வரும் 7ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதால் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அண்ணாமலையார் கோவிலில் வரும் 7ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!...

author img

By

Published : Nov 4, 2022, 10:54 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்; நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் மாதாமாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாதீபத்திருவிழாவும் உலகப் பிரசித்திபெற்றது.

இந்த ஆண்டு மகா தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி அண்ணாமலையார் சந்நிதி முன்பாக தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 20ஆயிரத்து 68 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியைக்காண வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகைபுரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.

குறிப்பாக இந்த மாத பௌர்ணமி வரும் 7ஆம் தேதி மாலை 4:45 மணிக்குத்தொடங்கி 8ஆம் தேதி மாலை 4:48 மணிக்கு முடிவடைய உள்ளதால் 7ஆம் தேதி அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் நிலையில், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

மேலும், மாலை ஆறு மணிக்கு மேல் அண்ணாமலையார் கருவறை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஆகையால், அன்றைய தினத்தன்று அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் 7 மற்றும் 8ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், பௌர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது' என கோயில் நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் - நிர்வாகம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.