திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் நிர்மலா தலைமையிலான காவல்துறையினர் கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு சின்டெக்ஸ் டேங்கில், 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலும் 300 லிட்டர் சாராயமும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து சாராய ஊறலை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டின் கடனை அடைத்து 50 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்பை வழங்கும் திட்டம் எங்களிடம் உள்ளது'