ETV Bharat / state

கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த துணை சபாநாயகர் - திருவண்ணாமலை அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலை : வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.

துணை சபாநாயகர் ஆய்வு
துணை சபாநாயகர் ஆய்வு
author img

By

Published : May 26, 2021, 9:25 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசால் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் பலனில்லை. உயிரிழப்பைத் தவிர்க்க அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலையின் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்துறை அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று (மே.26) நடைபெற்றது. இதனை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

திருவண்ணாமலையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்த துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி.

இதனைத் தொடர்ந்து சோமாசிபாடி, கழிக்குளம், மேக்கலூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களையும் அவர் பார்வையிட்டார். இதேபோல் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.குமார் தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க : ராஜிவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய்யக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.