திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 19) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 879ஆக இருந்தது. இன்று ( ஜூன் 20) ஒரே நாளில் புதிதாக 130 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,009ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து வந்த 52 பேர், விழுப்புரம், திருவள்ளூர், ஆரணி, செங்கல்பட்டு, பாண்டி ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தலா ஒருவர், காஞ்சிபுரத்திலிருந்து வந்த இரண்டு பேர், கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த 5 பேர், கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த 27 பேர் உள்ளிட்ட 130 பேருக்கு கரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 440ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 6ஆகவும் உள்ளது. நாளுக்கு நாள் கரோனா தொற்று அசுர வேகத்தில் பரவிவரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் திணறிவருகிறது.