திருவண்ணாமலையில் ஆடையூர், வேங்கிக்கால் புத்தர் நகர், பேகோபுரம் 3ஆவது தெரு, புது கார்கனார் 5வது தெரு ஆகிய நான்கு பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரின் வீடுகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வுசெய்தார்.
அப்போது கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளின் அருகில் வசிப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையும் நேரில் பார்வையிட்டார்.
மேலும் புது கார்கனார் 5ஆவது தெருவில் உள்ள முகாம்களில் தடுப்பூசி போடப்படுவதையும் பார்வையிட்டு பொதுமக்களிடம் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை எடுத்துக் கூறினார்.
இதையும் படிங்க: 'இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளது' சுகாதாரத்துறைச் செயலாளர் தகவல்!