திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தர்பார் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில் வட்டார தலைமை மருத்துவர் சுரேஷ் கலந்துகொண்டு உலகையே மிரளவைக்கும் இந்த கரோனா தாக்குதலில் இருந்து காத்துக்கொள்வது எப்படி என்று பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்டினார்.
மேலும் சோப்பு போட்டு தங்களது கைகளை சுத்தப்படுத்தும் முறையும், பின்னர் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களிடம் துண்டறிக்கை கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பான் தெளித்தனர். நம்மை காத்துக்கொள்ள அரசுடன் நாமும் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே நோயிலிருந்து விடுபடலாம் என எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க: தேனியில் ஆறு நாள்களே ஆன பெண் சிசு எருக்கம்பால் கொடுத்து கொலை!