இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தங்கபாலு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, ”காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் தொடங்க இருக்கிறார். 7-ம் தேதி கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும். இளம் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவும் ஒற்றுமையாக இருக்கின்ற மக்களை பிரிக்கிற ஆர்.எஸ் தத்துவத்திற்கு எதிராகவும் பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்காகவும். பிரதமர் மோடி தேர்தலில் வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 15 லட்ச ரூபாய் தருவதாக கூறினார். அந்தப் பணம் எங்கே இருக்கிறது விவசாயிகளின் சம்பளத்தை இரட்டிப்பு ஆக்குகிறேன் என்று சொன்னார் ஏன் அவ்வாறு செய்யவில்லை.
மேலும் பல்வேறு மக்கள் நல பணிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மாபெரும் நடை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க இருப்பதாக கூறியவர். திருவண்ணாமலை பகுதியில் இருந்து ஏராளமான தொண்டர்களை திரட்ட வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மிகுந்த எழுச்சியுடன் இருப்பதாக கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாகுமூர் பள்ளி மாணவி மரணம் சம்பந்தமாக நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நான் அந்த தீர்ப்புக்குள் செல்லவில்லை ஏனென்றால் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதா அல்லது விமர்சிக்கக் கூடாதா என்ற சட்ட சிக்கல் இருப்பதாகவும் தனக்கு உள்ள சந்தேகத்தை சொல்லுவதாகவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த சிறு குழந்தையின் மரணத்திற்காக துயரம் தெரிவித்து. பள்ளி நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதை கண்டனம் செய்து பல்வேறு அறிக்கைகள் வந்த பிறகும் கூட எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லுகின்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த மாணவியின் மரணத்தில் மட்டும் கருத்து கூறாமல் இருக்கிறார்” என்று தெரிவித்தார்
மேலும், கருத்தே சொல்லாதவராக இருந்தால் பிரச்சனை இல்லை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து கந்தசாமி மாதிரி எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லக்கூடியவர் ஏன் கன்னியாமுத்தூர் பள்ளி குழந்தை மரணத்திற்கு மட்டும் கருத்து சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியவர் அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை மேலும் அவர்கள் முறையான நீதி விசாரணை வேண்டுமென்றும் கேட்கவில்லை எதற்காக நீதிமன்றம் அவர்கள் செல்லவில்லை என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியவர்.
ஏற்கனவே ஒரு சம்பவத்தில் கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் படித்த குழந்தை மரணத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார்கள் என்று கூறியவர். அந்தக் குழந்தை விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டியவர்கள் கள்ளக்குறிச்சி விஷயத்தில் மட்டும் ஆர்வம் காட்டாததின் மர்மம் என்ன என்று கேள்வி எழுப்பியவர். எதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எதற்காக ஆர்.எஸ்.எஸ் மவுனமாக இருக்கிறார்கள் என்பதனை அறிவதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆனைமலை அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது