திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு கிராமம் அண்ணா தெருவில் கடந்த 18ஆம் தேதி முட்புதரில் வீசப்பட்டிருந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை மீட்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது .
அதன் பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பச்சிளம் குழந்தைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத்தின் வரவேற்பு மையத்தில் சேர்க்கப்பட்டு குழந்தை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது .
அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ' இனியன் ' என பெயர் சூட்டி அக்குழந்தையை, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார் .
இதையும் படிங்க: ராகுல்காந்திக்கு 'தமில்' வகுப்பெடுத்த நடிகை குஷ்பு - மதுரை பாஜக பிரச்சாரத்தில் ருசிகரம்!