திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூர், கலசப்பாக்கம், செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 17 ஆயிரத்து 322 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 60 ஆயிரத்து 26 பேர், 92 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 20 லட்சத்து 77ஆயிரத்து 440 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அறிவித்த 11 வகையான புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தலையொட்டி ஆயிரத்து 400 காவலர்களும், 240க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 13 ஆயிரத்து 808 அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 11 மணி நிலவரப்படி 26.29% வாக்குகள் பதிவு - சத்யபிரத சாகு